"பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை" - "பெண்களுக்கான திட்டங்களை பட்டியலிட்டார் பிரதமர்"

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணத் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை - பெண்களுக்கான திட்டங்களை பட்டியலிட்டார் பிரதமர்
x
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணத் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில பா.ஜ.க. சார்பில் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் துர்கா பூஜை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஆன்மீக பாடலை இசைக்க அதனை பிரதமர் நரேந்திர மோடி ரசித்து கேட்டார். 

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, துர்கா பூஜை என்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் பூரணத்துவத்தின் பண்டிகை என குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை புதிய வண்ணம், புதிய ஒளி, புதிய அழகை அளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் இருந்து இந்த மண்ணில் பிறந்த  மிகப் பெரிய மனிதர்கள் ஆயுதங்கள், வேதங்கள்,  தியாகத்தால் தாய் நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை ஆற்றி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி அப்போது பட்டியலிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்