மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

மத்திய அரசில் பணிபுரியும் மூன்று மற்றும் நான்காம் நிலை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பிற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
x
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும்,  இதனால் மத்திய அரசுக்கு 3 ஆயிரத்து 737 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். போனஸ் தொகையானது, விஜயதஷமிக்கு முன்பாக ஒரே தவணையில் வழங்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அரசின் வர்த்தக ரீதியில் செயல்படும் நிறுவனங்களான ரயில்வே, தபால்துறை, பாதுகாப்பு துறை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம், தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் உள்ளிட்டவற்றின் மூன்று மற்றும் நான்காம் நிலை பணியாளர்களுக்கு உற்பத்தித் திறன் அடிப்படையில்  போனஸ் தொகை வழங்கப்படும். போனஸ் அறிவிப்பு மூலம் 30 லட்சத்து 67 ஆயிரம் ஊழியர்கள் பலன் அடைவார்கள். 


Next Story

மேலும் செய்திகள்