வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.. இம்மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
x
மாநிலங்களவையில்,  விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அயல் நாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள், நிர்வாக செலவை 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்து இருப்பது, ஏற்கனவே கொரோனா காலத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழந்த நிலையில், நிர்வாகச் செலவுகளை குறைப்பது மேலும் பலர் வேலை இழக்க ஏதுவாகும் என தெரிவித்தார். இந்த சட்டம் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என்று உறுதி மொழியை அரசு அளிக்க வேண்டும் எனவும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளார். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல நல்ல பணியை செய்து வருவதாக தெரிவித்த அவர்,  நல்ல பணியை செய்யும் தொண்டு நிறுவனங்களை நெருக்குவதை உடனே  நிறுத்த வேண்டும் என்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்