கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க பிரதமர் திட்டம்

கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து, வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
காணொலியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட ஏழு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.  அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, நோய் தடுப்பு பணிகள், பள்ளிகள் திறப்பு, ரயில், விமான சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழு மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்