நாட்டில் வகுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் - தேசிய மாநாட்டு கட்சி தலைவர்

நாட்டில் தற்போது வகுப்பாத அரசியல் விளையாட்டில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஈடுபட்டு உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
நாட்டில் வகுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் - தேசிய மாநாட்டு கட்சி தலைவர்
x
தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் அப்துல்லாவின் 38-வது நினைவு தினத்தையொட்டி, ஹஸ்ரத்பாலில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, நாட்டில் தற்போது வகுப்புவாத அரசியலை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருவதாகவும், அதனாலேயே அவர்கள் விரைவில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். முஸ்லீம் மாநாட்டு கட்சியை, தேசிய மாநாட்டு கட்சி என்று மாற்றியவர்கள் தாங்கள் என்றும், வகுப்புவாத அரசியலை ஒரு போதும் தாங்கள் முன்எடுத்தது இல்லை என்றும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி  மதச்சார்பற்றது என்றும்,  குப்கார் பிரகடனத்தின் படி, இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 370-பிரிவின் கீழ் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வென்றெடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்