எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு - முதலமைச்சர் கண்டனம்

புதுச்சேரி வில்லியனூரில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
x
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது வருத்தத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து ஓட்டு அரசியல் பிழைப்புக்கு சிலர் திட்டமிடுவதை தமிழினம் ஏற்காது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர்,' எம்.ஜி.ஆர். சிலையை அவமரியாதை செய்த விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்