"மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை, பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம்" - ராகுல் காந்தி எச்சரிக்கை

மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார நிர்வாக மேலாண்மையால், நாட்டில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்றும், இது மிகப் பெரிய பேரழிவு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை, பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் - ராகுல் காந்தி எச்சரிக்கை
x
மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார நிர்வாக மேலாண்மையால், நாட்டில்  பல லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்றும், இது மிகப் பெரிய பேரழிவு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதனை மக்கள் நீண்ட நாட்களுக்கு அமைதியுடன் மக்கள் எதிர்க்கொள்ளமாட்டார்கள் என்றும் மத்திய அரசை ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு காலத்தில் குடும்பங்களின் வருமானம் தொடர்பான தகவல்கள் தமது பதிவில் இணைத்துள்ளார். நாட்டில் உள்ள 10-ல் 8 குடும்பங்கள் வருமானத்தை முற்றிலும் இழந்து உள்ளதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். நகர் புறங்களை விட கிராமப் புறங்களில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டி உள்ளார். கடந்த பல பத்தாண்டுகளில், முதல் முறையாக, தீவிர வறுமையின்  தலைகீழ் போக்கைக் காண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ராகுல் காந்தி, அரசை எச்சரித்துள்ளார். 










Next Story

மேலும் செய்திகள்