உத்தரப்பிரதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த புதிய கட்டுப்பாடு - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த, இனிமேல் அம்மாநிலத்தின் அனுமதியை மற்ற மாநிலங்கள் பெற வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.
உத்தரப்பிரதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த புதிய கட்டுப்பாடு - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல்
x
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், அம்மாநிலத்திற்கு இதுவரை திரும்பி உள்ளனர். அவர்களுக்கு மாற்று வேலைக்கான ஏற்பாடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர அம்மாநில அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, தங்கள் மாநில தொழிலாளர்கள் பல மாநிலங்களில்  தரமற்ற வகையில் நடத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் எந்தவொரு மாநிலமும், உத்தரப்பிரதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்  முன்பு , மாநில அரசின் இசைவு பெற வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்