செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் செவிலியரை திடீரென தொலைபேசியில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்
x
மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையான நாயுடு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 60க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கவனித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான சாயா ஜக்தாப் என்ற செவிலியரை திடீரென அழைபேசியில் அழைத்த மோடி கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்து  கேட்டறிந்தார். மேலும் செவிலியர்களின் பணிகள் குறித்தும் சாயாவிடம் மோடி பாராட்டி பேசியுள்ளார். மேலும் கொரோனா நோயாளிகளை எப்படி கையாளுகிறீர்கள் என்று சாயாவிடம் கேட்டதற்கு, அவர்களுக்கு தைரியமும்,ஆறுதலும் அளித்து உரிய மருத்துவ பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து உங்களின் அரும்பணியை தொடருங்கள் என்று கூறி தமது உரையாடலை முடித்துள்ளார் மோடி. 

Next Story

மேலும் செய்திகள்