ரூ.1.70 லட்சம் கோடி நிவாரணம் அறிவிப்பு - பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு.
ரூ.1.70 லட்சம் கோடி நிவாரணம் அறிவிப்பு - பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு
x
கொரோனாவால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார இயக்கமும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரவேற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரியான பாதையில் எடுத்து வைத்துள்ள முதல் அடி இது என தெரிவித்துள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என சோனியா காந்தி கடிதம் எழுதிய நிலையில், ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்