"கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
கேரளாவில்  பாலக்காட்டை சேர்ந்த 2பேர், எர்ணாகுளத்தை சேர்ந்த 3பேர் , பத்தனம்திட்டாவை சேர்ந்த 2 பேர்,  இடுக்கி மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்கள் என்று அவர் கூறினார்.  இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளதாகவும் ,112 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்