ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமனத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக (சிவிசி) சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அதீா் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமனத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
x
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக (சிவிசி) சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அதீா் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், அந்த பதவிக்கு உயர்நிலை நியமனக்குழுவால் அவர் பரிசீலிக்கப்படவோ, பரிந்துரைக்கப்படவோ இல்லை என்றும் அந்த பதவிக்காக சஞ்சய் கோத்தாரி விண்ணப்பிக்க கூட இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்யவும், உயர்நிலை குழுவை மறுகட்டமைப்பு செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்