"சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"

சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தமாக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளை மீறி கட்டியதாக கூறி, கடந்த ஜனவரி 28ஆம் தேதி, பாஸ்கரனுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில்,  சிஎம்டிஏ அனுமதி பெற்றுள்ள, அந்த கட்டிடத்தை வாங்கிய நாள் முதல், தான் அனைத்து வரிகளையும் செலுத்தி வருவதாகவும், கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தூரம் தள்ளியே வீடு அமைந்துள்ளதாகவும்  தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, டீக்காராமன் அடங்கிய அமர்வு, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலதடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, வீட்டு வசதி துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10க்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்