சோனியா உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு : டெல்லி அரசு, உள்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வெறுப்பு பேச்சு தொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேர் மீது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரிய வழக்கில், உள்துறை, டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சோனியா உள்ளிட்ட 7 பேர்  மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு : டெல்லி அரசு, உள்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
x
இரு தரப்பினர் இடையே வெறுப்புணர்வை உருவாக்கும் விதமாக பேசியதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை  நீதிபதி டி.என்.பட்டேல் மற்றும் சி.ஹரி ஆகியோர் அடங்கிய அமர்வு உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். இந்த வழக்கில்  டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானாத்துல்லா கான், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, வாரீஸ் பதான் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய மனுவில் கோரப்பட்டு இருந்தது. இதுதவிர, வெறுப்பு பேச்சு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்