அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் : இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கார்கள் உடைக்கப்பட்டன. 5 பேர் காயம் அடைந்தனர்.
அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் : இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்
x
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கார்கள் உடைக்கப்பட்டன. 5 பேர் காயம் அடைந்தனர். குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வத்திற்கும், மற்றொரு கவுன்சிலரான பிரவினாவின் கணவர் ராதாகிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சத்திரம் பகுதியில், செல்வம் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், அவரை மடக்கி காரை உடைத்து செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த 5 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தாக்குதலில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்