காங்., பாஜக எம்.பி.க்கள் ரகளை - நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

ராகுல்காந்தி விமர்சனத்துக்கு, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கண்டனம் தெரிவிக்க, அதை தொடர்ந்து நீடித்த அமளியால், நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
காங்., பாஜக எம்.பி.க்கள் ரகளை - நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
x
இந்திய இளைஞர்கள், இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் மோடியை பிரம்பால் அடிப்பார்கள் என ராகுல்காந்தி, டெல்லி பிரசாரத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், மக்களவையில் ராகுல் எழுப்பிய கேள்விக்க பதில் அளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், பிரதமர் மீதான ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அமைச்சர் ஹர்ஷவர்தனை நெருங்கிச் சென்றார். இதனை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக-வினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அவையை பிற்பகல் ஒருமணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். மீண்டும் கூடிய அவையிலும் அமளி ஏற்பட்டதால், அவையை நடத்திய ஆ.ராசா, நாள் முழுவதும் ஒத்திவைத்தார். Next Story

மேலும் செய்திகள்