"டியூப்லைட் என ராகுலை மறைமுகமாக விமர்சித்த மோடி"

மக்களவையில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்த போது, இடையே கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியை மறைமுகமாக டியூப்லைட் என மோடி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
டியூப்லைட் என ராகுலை மறைமுகமாக விமர்சித்த மோடி
x
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து  பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இடையே குறுக்கிட்டு ராகுல் காந்தி பேசினார். இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, தாம் கடந்த 30 முதல் 40 நிமிடங்களாக பேசிக்கொண்டிருந்தாலும், தாமதமாகவே கரண்ட் வந்திருக்கிறது என்றும் சில டியூப்லைட்டுகள் இப்படித்தான் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். இதை கேட்டதும் அவையில் இருந்த பாஜக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. மேலும், டெல்லி பிரசாரத்தின் போது, மோடியை இளைஞர்கள் விரைவில் கம்புகளை கொண்டு அடிப்பார்கள் என கூறியதாக சர்ச்சை எழுந்த விவகாரம்  குறித்து குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது, தாம் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தை அதிகரித்து, அதன் மூலம் அத்தகைய அடிகளை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு முதுகுத்தண்டை வலிமையாக்கிக்கொள்வேன் என தெரிவித்தார். நாடாளுமன்றத்தை காக்க வேண்டும் என தினமும் நூறு முறை கூறும் காங்கிரஸ் கட்சி, எமர்ஜென்சி சமயத்தில் அந்த கருத்தை மறந்துவிட்டதா என கேள்வி எழுப்பினார்.Next Story

மேலும் செய்திகள்