"நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் அரசியல் வேண்டாம்" - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

மத்திய பாஜக அரசின் விவசாய நலத்திட்டங்களை, அமல்படுத்த மறுக்கும் மாநிலங்கள், விவசாயிகளின் நலனுக்காக, உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் அரசியல் வேண்டாம் - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
x
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், பழைய எண்ணங்கள் மற்றும் பழைய வழியிலேயே, பணியாற்றியிருந்தால் வரலாற்றில் 370 சட்டப்பிரிவு இடம் பெற்றிருக்கும் என்றார். முத்தலாக்கினால் இஸ்லாமிய பெண்கள், தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், ராம ஜென்மபூமி தொடர்ந்து தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களை, அமல்படுத்த மறுக்கும் மாநிலங்கள், அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் நலன் காப்பதில், அரசியல் செய்ய வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்