"அரசு கல்லூரிகளில் பல கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள் : முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்"

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அரசு கல்லூரியில் 7 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் நிர்வாக கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரசு கல்லூரிகளில் பல கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள்  : முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அரசு கல்லூரியில் 7 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் நிர்வாக கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரி, சென்னை ராணிமேரி கல்லூரி, சேலம் பெரியார்  பல்கலைக்கழ வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்ட டங்களையும்   முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோல்  திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்