தேர்தல் தோல்வி - கோஷ்டி மோதல் : கல்வீச்சு - 3 பேர் படுகாயம்

கடலூர் அருகே தேர்தல் தோல்வி காரணமாக இரு கோஷ்டிக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
தேர்தல் தோல்வி - கோஷ்டி மோதல் : கல்வீச்சு - 3 பேர் படுகாயம்
x
கடலூர் அருகே தேர்தல் தோல்வி காரணமாக இரு கோஷ்டிக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லிக்குப்பத்தை அடுத்த வெள்ளப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவநாதன் என்பவரும் தர்மராஜன் என்பவரும் போட்டியிட்டனர். இதில் தேவநாதன் வெற்றி பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது. இதில் 3 பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  5 வீடுகள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்