"மக்களின் நலன் பற்றி பா.ஜ.க.வுக்கு கவலையில்லை" - முத்தரசன் குற்றச்சாட்டு

"நாட்டுக்குத் துரோகம் செய்கிறது, பா.ஜ.க."
x
நாடு முழுவதும் நிகழும் பிரச்சினைக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு நிலவதாக குறிப்பிட்டார். நாட்டு மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல், ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை பா.ஜ.க. தீவிரமாக அமல்படுத்தி நாட்டுக்குத் துரோகம் செய்வதாகவும் முத்தரசன் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்