"அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் அரசியல் அமைப்பு சாசனத்தை விட உயர்ந்தது அல்ல" - காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் அமைப்பு சாசனத்தை விட உயர்ந்தது இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் அரசியல் அமைப்பு சாசனத்தை விட உயர்ந்தது அல்ல -  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா
x
நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், இந்த மசோதா இந்திய குடியரசு மீதான தாக்குதல் என்றும் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்புக்கு விரோதமானது என்றும் கூறினார். மேலும், சுதந்திரத்தின்போது, நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்வது தவறானது என்றும்,  இந்திய பிரிவினை என்பது இங்கிலாந்து  நாடாளுமன்ற சட்டத்தினா​ல்  உருவானது என்றும் விளக்கம் அளித்தார். ஜின்னாவின் இருநாடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர் வீர் சாவர்க்கர் என கூறிய ஆனந்த் சர்மா, அரசியல் அமைப்பு சாசனத்தில் திருத்தம் செய்த போது எல்லாம், மத அடி​ப்படையில் செய்யப்படவில்லை என குறிப்பிட்டார். தற்போதைய மசோதா மத அடிப்படையிலானது என்பதால், அரசியல் சாசனம் பிரிவு 14-க்கு எதிரானது என கூறுவதாகவும் விளக்கம் அளித்தார். மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்ட வேண்டாம் என கூறிய அவர், மோடி மீது சர்தார் வல்லபாய் படேல் நிச்சயம் வருத்தப்படுவார் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்