நட்சத்திர ஓட்டலில் ஒன்று கூடிய 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள், சிவசேனா ஆதரவு 162 எம்.எல்.ஏக்கள் உறுதி மொழி

சிவசேனா ஆதரவு 162 எம்.எல்.ஏ-க்கள் மும்பை நட்சத்திர விடுதியில், ஒன்று கூடி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
நட்சத்திர ஓட்டலில் ஒன்று கூடிய 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள், சிவசேனா ஆதரவு 162 எம்.எல்.ஏக்கள் உறுதி மொழி
x
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில் இந்த 3 கட்சிகளை சேர்ந்த 162 எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில், இரவு 7 மணியளவில்  ஒன்று கூடினர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் சிவசேனா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 162 பேரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். சோனியாகாந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் தங்கள் கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொள்வோம் என்றும், பாஜகவுக்கு ஆதாயம் தரும் எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் அனைத்து  எம்.எல்.ஏ.க்களும் உறுதி மொழி ஏற்றனர். 

எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், எங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க 162-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை அழைத்து வருவோம் என்றும், இது கோவா அல்ல, மகாராஷ்டிரா என்றும் தெரிவித்தார்.  தங்களை எந்தளவுக்கு உடைக்க முயற்சிக்கிறார்களோ அந்தளவிற்கு அதிகமாக ஒன்றுபடுவோம்  என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்