"வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு" : மத்திய - மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வேலை வாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கா விட்டால், இளைஞர்களை திரட்டி, மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு : மத்திய - மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
மதுரை  மற்றும் திருச்சி ரெயில்வே கோட்டங்களில், 90 சதவீத பணி இடங்கள், வட மாநிலத்தவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையொன்றில், அவர் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு,  இலவு காத்த கிளிகளைப்போல், காத்திருப்பதாக சுட்டிக்காட்டி உள்ள மு.க. ஸ்டாலின், காலி பணி இடங்களை எல்லாம் வட மாநிலத்தவர்களுக்கு வாரி வழங்குவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டு உள்ளார். தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல்,  தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வரா விட்டால், இளைஞர்களை திரட்டி, மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்  என்றும் தமது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்