பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 01:12 AM
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பருப்பு கொள்முதலில் முறைகேடு செய்ததால் அரசுக்கு, 730 கோடி ரூபாய் இழப்பு என 2014 ஆம் ஆண்டு ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து, ராமதாஸ்க்கு எதிராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். அமைச்சரை குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை என ராமதாஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.  இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

25 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

13 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

17 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

342 views

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

1410 views

"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.