"சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக" - ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவை பொறுத்தவரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
x
அதிமுகவை பொறுத்தவரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து, பேரணாம்பட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது"

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது, தற்காலிக வெற்றி என குறிப்பிட்ட அவர், வேலூரில் ஏ.சி. சண்முகம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். எந்த காலத்திலும்,  ஸ்டாலினால், ஒருபோதும் முதலமைச்சர் பதவியை பிடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த கொம்பன் வந்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் பன்னீர்செல்வம், தமது பிரசாரத்தின்போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்