தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன் - ராகுல் காந்தி

தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
x
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், தேர்தல் தோல்விக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் காரணம் என்றார்.காங்கிரஸ் கட்சியை வழிநடத்த, புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணியை விரைவாக மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்வதாகவும் ராகுல் காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்று கூறியுள்ள ராகுல் காந்தி அவர்கள் சித்தாந்தத்தை மட்டுமே தாம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு நிறுவனங்களை பா.ஜ.க. ஆக்கிரமித்துவிட்டதாக தமது கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல்,  பா.ஜ.க. என்ற தனிக்கட்சியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசுத்துறையையே எதிர்த்து தான் தேர்தலில் தாம் போட்டியிட்டதாக கூறியுள்ளார்.பலம் வாய்ந்த பா.ஜ.க. வை எதிர்க்க, காங்கிரஸ் கட்சி சில கடின முடிவுகளை எடுத்து முற்றிலும் உருமாற வேண்டியது அவசியம் என்றும் ராகுல் காந்தி தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.கடைசி மூச்சு உள்ள வரை காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பதவியில் இருந்து விலகுவது மூலம் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் இருந்து பின்வாங்கிவிட்டேன் என்று எண்ண வேண்டாம் என்று கூறியுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அளித்த அன்புக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்