பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை விவரம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்
x
பணியாளர் , பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி விண்வெளி மற்றும் அனைத்து முக்கிய கொள்கைகள் சார்ந்த விவகாரங்கள் மற்றும் ஒதுக்கப்படாத இதர துறைகள் பிரதமர் நரேந்திர மோடி வசம் உள்ளன.

கேபினட் அமைச்சர்கள் :

பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிற்கும், உள்துறை அமித்ஷாவிற்கும், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறுகுறு , நடுத்தர தொழில்துறை நிதின் கட்கரிக்கும் , நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை நிர்மலா சீதாராமனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.சதானந்த கவுடாவிற்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும், ராம் விலாஸ் பாஸ்வானுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறையும், நரேந்திரசிங் தோமருக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும், ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ரவிசங்கர் பிரசாத்திற்கும்,  உணவு பதனிடும் தொழில்கள் துறை ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கும், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை தாவர்சந்த் கெலாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.எஸ்.ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறையும், ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு மனிதவள மேம்பாட்டு துறையும், அர்ஜூன் முண்டாவிற்கு பழங்குடியினர் நலத்துறையும், ஸ்மிருதி இராணிக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியியல் துறைகள் ஹர்ஷ் வர்தனுக்கும், சுற்றுச்சூழல் , வனம், மற்றும் பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்பு துறை பிரகாஷ் ஜவடேகருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.பியூஷ் கோயலுக்கு ரயில்வே , தொழில் மற்றும் வர்த்தக துறையும் தர்மேந்திர பிரதானுக்கு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உருக்கு துறையும், முக்தார் அப்பாஸ் நக்விக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், பிரகலாத் ஜோஷிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் , நிலக்கரி மற்றும் சுரங்க துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை, அரவிந்த் கன்பத் சாவந்த்திற்கும், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் கிரிராஜ் சிங்கிற்கும், நீர்வளத்துறை கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) :

தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை, இணையமைச்சர் தனி பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ்குமார் கங்வாருக்கும், புள்ளியல் , திட்ட அமலாக்கம் மற்றும் திட்ட துறை,  ராவ் இந்திரஜித் சிங்கிற்கும், ஆயுர்வேதா யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மற்றும் பாதுகாப்புதுறை ஸ்ரீபத் யசோநாயக்கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜிதேந்திர சிங்கிற்கு வடகிழக்கு மாநில வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையும், கிரண் ரிஜிஜூவிற்கு இளைஞர் நலன் விளையாட்டுதுறை , சிறுபான்மையினர் நலத்துறையும், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை பிரகலாத் சிங் பட்டேலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் நலன் ஆகிய துறைகள் ராஜ்குமார் சிங்கிற்கும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, விமான போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஹர்திப் சிங் பூரிக்கும், கப்பல், ரசாயனம் மற்றும் உரத்துறை மன்சுக் எல்.மண்டாவியாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இணை அமைச்சர்கள் :

இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஃபக்கன் சிங் குலஸ்தேவிற்கு உருக்குதுறையும், அஸ்வினி குமார் சவ்பேவிற்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும், அர்ஜூன் ராம் மேஹ்வாலுக்கு நாடாளுமன்ற விவகாரம் , கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வி.கே.சிங்கிற்கும்,  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கிருஷன் பாலுக்கும், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக துறை தன்வே ராவ் சாஹேப் தாதாராவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.கிஷன் ரெட்டி உள்துறை இணையமைச்சராகவும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை இணையமைச்சராக பர்ஷோத்தம் ரூபாலாவும், ராம்தாஸ் அதவாலே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சராகவும், ஊரக வளர்ச்சி துறை இணையமைச்சராக சாத்வி நிரஞ்சன் ஜோதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சுற்றுச்சூழல், வனம், பருவ நிலை மாற்ற துறை இணையமைச்சராக பாபுல் சுப்ரியோவும், கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சராக சஞ்சீவ் குமார் பால்யானும் , மனித வள மேம்பாடு , தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சராக தோத்ரே சஞ்சய் சாம்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனுராக் சிங் தாக்கூருக்கு, நிதி மற்றும் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பொறுப்பும், அங்கடி சுரேஷ் சன்னபசப்பாவுக்கு ரயில்வே இணையமைச்சர் பொறுப்பும், நித்யானந்த ராய்க்கு உள்துறை இணையமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.நீர்வளம், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சராக ரத்தன்லால் கட்டாரியாவும், வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராக வி.முரளிதரனும், பழங்குடியின துறை இணையமைச்சராக ரேணுகா சிங் செரூதாவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக சோம் பிரகாசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ராமேஸ்வர் தேலி, உணவு பத‌ப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சராகவும், பிரதாப் சந்திர சாரங்கி, சிறு குறு நடுத்தர தொழில்கள் , கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சராகவும், கைலாஷ் சவுத்ரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சராகவும், சுஸ்ரி தேபஸ்ரீ சவுத்ரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்