ஏழைகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்கும் காங்கிரஸ் அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ள மாதம் தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
ஏழைகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்கும் காங்கிரஸ் அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு...
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ள மாதம் தோறும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சூறையாடப்பட்டு விட்டதாக எண்ணிய ஏழை எளிய மக்களுக்கு பா.ஜ.க. அரசு ஆக்கபூர்வமான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல், கடந்த ஐந்தாண்டு காலத்தில், கார்ப்பரேட் மற்றும் விளம்பர அரசாகவே ஆட்சியை நிறைவு செய்து விட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.  பா.ஜ.க. ஆட்சியில் ஏங்கித் தவித்து கொண்டு இருக்கின்ற ஏழைகளுக்கு, ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு ஒரு  வரப்பிரசாதம் மட்டுமல்ல , ஒரு அட்சய பாத்திரமாக கண்ணுக்குத் தெரிவதாகவும் ஸ்டாலின் அதில் சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்