என். ஆர். காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்பு மனு தாக்கல்

நேரடிப் போட்டியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள்
என். ஆர். காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்பு மனு தாக்கல்
x
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நாராயணசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுச்சேரி  நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவும்  நிலையில், காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ்  சார்பில் நாராயணசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில்  நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி  வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரது கார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டது. அதனால் காரை நகர்த்துமாறு போலீசார் கூறியதால் தொண்டர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்