மக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
x
அதன்படி, திருவள்ளூர் தனி தொகுதியில்  பி. வேணுகோபால், தென் சென்னையில் ஜெ. ஜெயவர்த்தன், காஞ்சிபுரம் தனி தொகுதியில் மரகதம் குமரவேல் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் கே.பி.முனுசாமியும், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணியில் செஞ்சி வெ. ஏழுமலையும், சேலத்தில் கே.ஆர்.எஸ்.சரவணனும் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். நாமக்கல் தொகுதியில் பி.காளியப்பனும், ஈரோட்டில் வெங்கு (எ) ஜி. மணிமாறனும், திருப்பூரில் எம்.எஸ்.எம். ஆனந்தனும், நீலகிரி தனி தொகுதியில் எம்.தியாகராஜனும் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொள்ளாச்சியில் சி. மகேந்திரனும், கரூரில் மு. தம்பிதுரையும், பெரம்பலூரில் என்.ஆர். சிவபதியும், சிதம்பரம் தனி தொகுதியில் பொ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை தொகுதியில் எஸ். ஆசைமணியும், நாகை தனி தொகுதியில் தாழை ம. சரவணனும், மதுரையில் வி.வி.ஆர். ராஜ்சத்தியனும், தேனியில் ப. ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலி தொகுதியில் பி.ஹெச். பாண்டியனும் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

18 தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.  வெளியிட்டுள்ளது. 

பூந்தமல்லி தனி தொகுதியில் ஜி. வைதியநாதன், பெரம்பூர் தொகுதியில் ஆர். எஸ் ராஜேஷ், திருப்போரூர் தொகுதியில் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத், குடியாத்தம் தனி தொகுதியில், கஸ்பா.ஆர்.மூர்த்தி, ஆம்பூர் தொகுதியில் ஜே.ஜோதி ராமலிங்க ராஜா ஆகியோர் போட்டியிட உள்ளனர். ஓசூர் தொகுதியில் எஸ்.ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, பாப்பிரெட்டிபெட்டி தொகுதியில் ஏ.கோவிந்தசாமி, அரூர் தனி தொகுதியில் வி.சம்பத்குமார், ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை தனி தொகுதியில் எஸ்.தேன்மொழி, திருவாரூர் தொகுதியில் ஆர் ஜீவானந்தம், தஞ்சாவூர் தொகுதியில் ஆர்.காந்தியும் அ.தி.மு.க. வேட்பாளர்களாக  போட்டியிட உள்ளனர். எஸ் நாகராஜன், மானாமதுரை தனி தொகுதியிலும், ஏ.லோகிராஜன் ஆண்டிபட்டி தொகுதியிலும், எம்.முருகன் பெரியகுளம் தனி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சாத்தூர் தொகுதியில், எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், பரமக்குடி தனி தொகுதியில் என்.சதன் பிரபாகர், விளாத்திக்குளம் தொகுதியில் பி.சின்னப்பன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - வைகைச்செல்வன் கருத்து

அதிமுக,பாமக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து கோலாகல ஸ்ரீநிவாஸ் கருத்து

திமுக - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வாரிசு அரசியலை பின்பற்றுகிறதா ? டி.எஸ்.எஸ்.மணி கருத்து

அதிமுக, பாமக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து ரவீந்திரன் துரைசாமியின் கருத்து

18 தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.  வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்