அதிமுக கூட்டணி தொகுதிகள் பட்டியலை அறிவித்தார் பன்னீர் செல்வம்

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணி தொகுதிகள் பட்டியலை அறிவித்தார் பன்னீர் செல்வம்
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் அந்த கட்சிகள் சார்பாக கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார். 

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி விவரம்
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள தொகுதிகளின் விவரங்களை பார்ப்போம். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர். தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்சென்னை ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், பா.ம.க.வுக்கு தருமபுரி, விழுப்புரம்,அரக்கோணம்,கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூரும், பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி,சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி, திருச்சி விருதுநகர்,  வடசென்னை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். த.மா.கா.வுக்கு தஞ்சையும் புதிய நீதிகட்சிக்கு வேலூர் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்