மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
அதன்படி, வடசென்னையில் கலாநிதி வீராச்சாமியும், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதிமாறனும் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீபெரும்புத்தூரில் டி.ஆர்.பாலுவும்,  காஞ்சிபுரம் தனித்தொகுதியில் ஜி.செல்வமும், அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகனும் களமிறங்குகின்றனர். வேலூரில் கதிர் ஆனந்தும், தர்மபுரியில் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர். சி.என்.அண்ணாதுரை திருவண்ணாமலையிலும், கௌதம் சிகாமணி கள்ளக்குறிச்சியிலும், எஸ்.ஆர்.பார்த்திபன் சேலத்திலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆ.ராசா நீலகிரி தனித்தொகுதியிலும், சண்முகசுந்தரம் பொள்ளாச்சி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல்லில் பா.வேலுச்சாமியும், கடலூரில் ஸ்ரீ ரமேஷும், மயிலாடுதுறையில் சே.ராமலிங்கமும், தஞ்சாவூரில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் களம் காண்கின்றனர். தூத்துக்குடியில் கனிமொழியும், தென்காசி தனித்தொகுதியில் தனுஷ் எம்.குமாரும், திருநெல்வேலியில் சா.ஞானதிரவியமும் திமுக வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்.

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான  வேட்பாளர் பட்டியலையும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

பூந்தமல்லி தனித்தொகுதியில் ஆ.கிருஷ்ணசாமியும், பெரம்பூரில் ஆர்.டி.சேகரும், திருப்போரூரில் எஸ்.ஆர்.இதயவர்மனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சோளிங்கரில் அ.அசோகனும், குடியாத்தம் தனித்தொகுதியில் எஸ்.காத்தவராயனும் அ.செ.வில்வநாதன் ஆம்பூரிலும் களமிறங்குகிறார்கள். எஸ்.ஏ.சத்யா ஒசூரிலும், ஆ.மணி பாப்பிரெட்டிப்பட்டியிலும், செ.கிருஷ்ணகுமார் அரூர் தனித்தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சி.சௌந்தரபாண்டியன் நிலக்கோட்டை தனித்தொகுதியிலும் , திருவாரூரில் பூண்டி.கே.கலைவாணனும், தஞ்சாவூரில் டி.கே.ஜி.நீலமேகமும் வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். மானாமதுரை தனித்தொகுதியில் கரு.காசிலிங்கம் என்ற இலக்கியதாசனும், ஆண்டிப்பட்டியில் ஏ.மகாராஜனும் போட்டியிடுகின்றனர். பெரியகுளம் தனித்தொகுதியில் கே.எஸ்.சரவணக்குமாரும், பரமகுடி தனித்தொகுதியில் ச.சம்பத்குமாரும், சாத்தூரில் எஸ்.வி.சீனிவாசனும் களமிறங்குகிறார்கள். விளாத்திக்குளத்தில் ஏ.சி.ஜெயக்குமாரும் போட்டியிடும் நிலையில்,   புதுச்சேரி மாநிலத்திலுள்ள தட்டாஞ்சாவடியில்  கே.வெங்கடேசன் களமிறக்கப்படுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்