அரசு செயலாளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

லோக் ஆயுக்தா கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம்
அரசு செயலாளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
x
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களைத்  தேர்வு செய்யும் கூட்டத்தில் தாம் பங்கேற்க இயலாதது குறித்து அரசு செயலாளருக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் வழங்கிய ஆலோசனைகளை, அரசு பரிசீலிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.அதிகாரமற்ற ஒரு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் தாம் பங்கேற்க இயலாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்