"அபிநந்தன் படத்தை வைத்து பிரசாரம் செய்வது தவறு" - குஷ்பூ, காங்.

அபிநந்தன் படத்தை வாகனங்களில் வைத்து அரசியல் பிரசாரம் செய்வது தவறானது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்தார்
x
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயயுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர் சினேகாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், தில்லையாடி வள்ளியம்மை விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இந்த விருதை வழங்கினார். ரூபி மனோகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, அபிநந்தன் படத்தை வாகனங்களில் வைத்து அரசியல் பிரசாரம் செய்வது தவறானது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்