50 % விவசாயிகளில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு - பட்ஜெட் குறித்து கமலஹாசன் அறிக்கை

50 % விவசாயிகளில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
50 % விவசாயிகளில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு - பட்ஜெட் குறித்து கமலஹாசன் அறிக்கை
x
தமிழகத்தில் 50 சதவீத மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், வெறும் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் போதிய மழை பெய்து வருவதாக நீர் மேலாண்மை வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், நீர் பற்றாக்குறை மாநிலம் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இது அரசின் ஊழல் மற்றும் இயலாமையால் ஏற்படும் பற்றாக்குறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை தேடி வரும் நிலையில், 82 ஆயிரத்து 64 இளைஞர்கள் மட்டுமே திறன் பயிற்சி பெற்றனர் என்றால் மீதமுள்ளவர்களுக்கு வேலை எங்கே என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்