"மதுரை எய்ம்ஸ் - நிதி ஒதுக்கீடு எவ்வளவு?" - திமுக தலைவர் ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
x
ஈரோடில், திமுக சார்பில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ சிலையை, ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், பிப்ரவரி மாத இறுதியில் மக்களவை தேர்தலுடன், 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியாகும் என கூறினார்.

தேர்தல் நெருங்குவதால் மக்களை ஏமாற்றி, திசைதிருப்பும் முயற்சியில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அண்மையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்