அன்னிய செலாவணி மோசடி வழக்கு - சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

காணொளி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை
அன்னிய செலாவணி மோசடி வழக்கு - சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு
x
பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, அன்னிய செலாவணி மோசடி குறித்த 4 வழக்குகள்,  எழும்பூர் பொருளாதார குற்றவியல்  நடுவர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்காக, சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலா, குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக, வழக்கின் விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு,நீதிபதி மலர்மதி, தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்