ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி
x
சத்தீஸ்கர் மாநிலம், அடல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். நிகழ்ச்சியில், விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என பா.ஜ.க. இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தால், உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் என கூறினார். இதன் மூலம் குறைந்த பட்ச வருமானம் கிடைக்க வழி வகை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்