"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும்" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். கரூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் முதலீட்டாளர்களுக்கான தெருமுனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழகத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடத்தை தேர்வு செய்து கொடுத்தவர் ஜெயலலிதா என்பதால் மருத்துவமனைக்கு அவர் பெயரையே சூட்ட வேண்டும் என்றார்.
Next Story