உறுதியாகிறதா அதிமுக, பாஜக கூட்டணி...?

ஒரே நாளில் டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற சந்திப்புகள் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
உறுதியாகிறதா அதிமுக, பாஜக கூட்டணி...?
x
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், தமிழக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் 
தங்கமணியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லி சென்றுள்ள அவர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணியை கட்சி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.முன்னதாக சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்துப் பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக பாஜக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். ஸ்டாலின் விமர்சனத்தை மறுக்காத பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக பாஜக கூட்டணி குறித்து சூசகமாக விளக்கம் அளித்துள்ளார். ஒரே நாளில் டெல்லி மற்றும் சென்னை சந்திப்புகள் அதிமுக மற்றும் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்