நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : திருவாரூரில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்

திமுக வரும் 3ஆம் தேதி முதல் ஊராட்சிதோறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. இதனை, திருவாரூரில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : திருவாரூரில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
x
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தோறும் திமுக மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் இருந்து இந்தப் பிரச்சாரத்தை, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதபோல்,  ஈரோடு மாவட்டத்தில் அக்கட்சிப் பொருளாளர் துரைமுருகனும், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரத்திலும் மாவட்ட கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இதற்கு, "மக்களிடம் செல்வோம் - சொல்வோம் - மனங்களை வெல்வோம்" என்ற முழக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்