அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு...

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு...
x
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  9 அடி உயர வெண்கலச் சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்