பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஸ்டாலின் ஆய்வு...

ராயப்பேட்டையில் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு சென்ற ஸ்டாலின், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஸ்டாலின் ஆய்வு...
x
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  9 அடி உயர வெண்கலச் சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, இன்று  மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி, சென்னை விமான நிலையம்,  அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் ஆகிய  இடங்களில் மொத்தமாக 5000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்துக்கு சென்ற ஸ்டாலின், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமரும் பகுதி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்