"அதிமுகவில் சேர முயற்சித்தார், செந்தில்பாலாஜி" - அமைச்சர் தங்கமணி

"அதிமுகவில் சேர முயற்சித்தார், செந்தில்பாலாஜி" - அமைச்சர் தங்கமணி
அதிமுகவில் சேர முயற்சித்தார், செந்தில்பாலாஜி - அமைச்சர் தங்கமணி
x
திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, அதிமுகவில் சேர பலமுறை முயற்சி செய்ததாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  செந்தில் பாலாஜி பல கட்சிகள் மாறியதால் மீண்டும் சேர்த்துகொண்டால் குழப்பம் ஏற்படும் என கட்சி தலைமை கருதியதாகவும் கூறினார். மேலும், அதிமுகவை பற்றி பேச செந்தில் பாலாஜிக்கு தகுதி இல்லை என கூறிய அமைச்சர் தங்கமணி, அவர் திமுகவில் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்