"செந்தில் பாலாஜி, நன்றி மறந்தவர்" - கடம்பூர் ராஜு

"செந்தில் பாலாஜி, நன்றி மறந்தவர்" - கடம்பூர் ராஜு
செந்தில் பாலாஜி, நன்றி மறந்தவர் - கடம்பூர் ராஜு
x
திமுகவில் சேர்ந்துள்ள செந்தில் பாலாஜி, நன்றி மறந்தவர் என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி மற்றும் ஊத்துப்பட்டி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பல கட்சிகளில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா என்றார்.  அந்த நன்றி இல்லாமல் அதிமுக-வை மூழ்கும் கப்பல் என செந்தில் பாலாஜி கூறுவதன் மூலம் மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்