தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுடன் தினகரன் சந்திப்பு

தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுடன் தினகரன் சந்திப்பு
தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுடன்  தினகரன் சந்திப்பு
x
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், மதுரையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மாட்டுத் தாவணி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், இரவு 8 மணிக்கு மேல் துவங்கிய இந்த கூட்டத்தில்,  ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்ச்செல்வன், மானா மதுரை - மாரியப்பன் கென்னடி, ஒட்டப்பிடாரம்  - சுந்தர் ராஜ், பெரியகுளம் - டாக்டர் கதிர்காமு,  நிலக்கோட்டை - தங்கதுரை, பூந்தமல்லி - எழுமலை, விளாத்திக்குளம் - உமா மகேஸ்வரி, அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, திருப்போரூர்-  கோதண்டபாணி ஆகியோருடன் அதிமுக எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி - பிரவும் கலந்து கொண்டார்.  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா, அல்லது, இடைத்தேர்தலை சந்திப்பதா ? என்பது குறித்து, இவர்களிடம் டி.டி.வி. தினகரன் கருத்து கேட்டறிந்தார்.  தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே, டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதால், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்