மேல் முறையீடு செய்யாமல் தேர்தலை சந்தியுங்கள் - டி.டி.வி. தினகரனுக்கு, திவாகரன் யோசனை

மேல் முறையீடு செய்யாமல் தேர்தலை சந்தியுங்கள் - டி.டி.வி. தினகரனுக்கு, திவாகரன் யோசனை
மேல் முறையீடு செய்யாமல்  தேர்தலை சந்தியுங்கள் - டி.டி.வி. தினகரனுக்கு, திவாகரன் யோசனை
x
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனை ப. சிதம்பரம் தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், உடல் நலனையும் பொருட்படுத்தாமல், ஜெயலலிதா பிரசாரம் செய்து வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அதிமுக இழந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். எனவே,தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல், டி.டி.வி.தினகரன், உடனடியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதிவாகரன், யோசனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்