தகுதி நீக்கம் தீர்ப்பு... அடுத்து என்ன...?

18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை தொடர்ந்து, அரசியலில் என்ன நிகழும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்
தகுதி நீக்கம் தீர்ப்பு... அடுத்து என்ன...?
x
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க தீர்ப்பை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் காலி இடங்களின் எண்ணிக்கை 20 ஆகி விட்டது. இதனால், சட்டப்பேரவையின் பலம் 214 ஆக குறைந்துள்ளது. இதனால், தற்போதைய நிலையில், பெரும்பான்மைக்கு 108 பேரின் ஆதரவு தேவை.ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 116 பேரின் ஆதரவு உள்ளது. எனவே, ஆட்சிக்கு சிக்கல் இல்லை.இதற்கிடையே, அதிமுக உறுப்பினர்களில் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். இதுபோல கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் சுயேச்சையாக எந்த பக்கமும் செல்லலாம் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த 6 பேரை நீக்கி விட்டு பார்த்தால், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை, 110 ஆக குறையும். இந்த சூழ்நிலையில், 20 தொகுதி இடைத்தேர்தலில், 8ல் வென்றால், தனிபெரும்பான்மையான 118 எண்ணிக்கையை அதிமுக-வால் எட்ட முடியும். அதே நேரத்தில், 6 பேரும் முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நீடித்தால், 20 தொகுதிகளில் 2ல் வெற்றி பெற்றாலே போதும்.அதே நேரத்தில், எதிர்க்கட்சி வரிசையில் திமுகவுக்கு 88, காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் ஒன்று, சுயேச்சை எம்எல்ஏ தினகரன் என 98 பேர் உள்ளனர். எனவே, 20 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகளுடன் அதன் பலம் 117ஆக அதிகரித்து திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகலாம்.



Next Story

மேலும் செய்திகள்