தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் - விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர்

தொடர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் - விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர்
x
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய விஜயபிரபாகர், இளைஞர்கள் அனைவரும் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அடுத்த தேர்தலில், தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகர், தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபட போவதாகவும், கட்சியில் பொறுப்பேற்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்